மடுல்சீமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கெரண்டியெல ஆற்றில் இருந்து 37வயதுடைய ஆணொருவரின் சடலத்தை மடுல்சீமை பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் கடந்த 28ம் திகதி முதல் காணாமல் போயிருந்ததாக 29ம் திகதி மடூல்சீமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுயிருந்தது .
இதன் போது 5 பொலிஸ் குழுவினரும் பொதுமக்களும் இணைந்து தேடுதலை மேற்கொண்ட போது கெரண்டியெல ஆற்றுப் பகுதியில் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
சடலம் நீதவான் பார்வையிட்டதன் பின்னர், பதுளை வைத்தியசாலை பிரேத அறையில் வைத்திய பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மடுல்சீமை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.




