இங்கிலாந்தில் குழந்தைகளை பலாத்காரம் செய்த பராமரிப்பு மைய ஊழியருக்கு 10 ஆண்டு சிறை

0
25

இங்கிலாந்தின் சர்ரே நகரில் குழந்தைகள் பராமரிப்பு மையம் செயல்படுகிறது. அங்கு தாமஸ் வாலர் (வயது 18) என்ற வாலிபர் ஊழியராக பணிபுரிந்து வந்தார். குழந்தைகளை இயற்கை உபாதைக்கு அழைத்து செல்வது, அவர்களுக்கு உடை மாற்றி விடுவது ஆகிய வேலைகள் அவருக்கு ஒதுக்கப்பட்டு இருந்தன.

ஆனால் இயற்கை உபாதைக்கு அழைத்து சென்ற இடத்தில் குழந்தைகளை அவர் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல குழந்தைகளின் ஆபாச புகைப்படங்களும் அவரது செல்போனில் இருந்தன.

இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. எனவே தாமஸ் வாலருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

dailythanthi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here