இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் சிரியா பயணம்

0
5

இங்கிலாந்தின் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமி அரசு முறை பயணமாக சிரியாவுக்கு செல்ல உள்ளார்.

அங்கு சென்று இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா நாடுகளுடன் சிரியாவின் இராஜாங்க உறவு, மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து புதிய ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கி இதுவரை இங்கிலாந்து உட்பட பிற நாட்டைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகள் சிரியாவுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிரியாவின் தலைநகரமான டமாஸ்கஸ் உள்ளிட்ட நாட்டின் பெரும்பான்மையான பகுதிகள் உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிற்குள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here