இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த ஈரானின் ‘IRIS Bushehr’ கப்பலில் இருந்த 204 ஊழியர்கள் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (05) விசேட அறிவிப்பொன்றை விடுத்திருந்தார். குறித்த கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி அங்கு குறிப்பிட்டார்.
குறித்த ஈரானிய கப்பலில் மொத்தம் 208 ஊழியர்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




