இணையத்தில் ஆபாச படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்தால் இனி கடும் நடவடிக்கை

0
265

கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார்.
இணையதளத்தில் ஆபாச படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் சீ.டி. விக்கிரமரத்ன பணிப்புரை விடுத்துள்ளார்.

கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார்.

ஆபாச படங்களையும், வீடியோக்களையும் இணையதளத்தில் பரப்பிவருபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் அண்மைக்காலமாக அரசாங்கம் மேற்கொண்டுவந்த தீர்மானங்களின் அடிப்படையில் இந்த உத்தரவுகளை பொலிஸ்மா அதிபர் வழங்கியுள்ளார்.

இதேவேளை, நாட்டில் நடைபெற்றுவரும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொலிஸ்மா அதிபர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here