இணையம் வழியாக பெண் பாடசாலை மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது

0
197

பெண் பாடசாலை மாணவர்களை இணையம் வழியாக பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தம்புத்தேகாமாவில் வசிக்கும் 28 வயது சந்தேகநபர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

பிடபெத்த பகுதியில் பாடசாலை ஒன்றின் அதிபர் ஊடாக வேறு சில பாடசாலை மாணவிகள் இணையத்தளத்தை மையப்படுத்திய பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகியுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. இதற்கமைவாக மாத்தறை சிறுவர் மற்றும் பெண்கள் பொலிஸ் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது

சந்தேக நபர் இலங்கையில் உள்ள ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் சந்தைப்படுத்தல் அதிகாரியாக 2 ஆண்டுகள் சேவையை பெற்றுள்ளார் என மாத்தறை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் பல பெண் மாணவர்களின் தொலைபேசி இலக்கங்களை அவர்களின் ஆன்லைன் இலவச ஜூம் தொழில்நுட்ப கல்விக்கு உதவுவதாக தெரிவித்து பெற்றுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களின் இலக்கங்களை பெற்ற பின்னர், சந்தேக நபர் அவர்களை இணையம் மூலம் பாலியல் ரீதியாக தொல்லை செய்து மாணவர்களின் நிர்வாண புகைப்படங்களையும் பெற்றுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை இன்று வியாழக்கிழமை மொராவகா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here