இவ்வருடம் 6,504 பேர் எலிக் காய்ச்சல் நோயாளர்களாக பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த வருடத்தில் இதுவரை எண்பதுக்கும் மேற்பட்டோர் எலிக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை, மாத்தறை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக பதிவாகியுள்ளதோடு, இந்த வருடம் நவம்பர் மாதத்தில் மாத்திரம் தொள்ளாயிரத்து அறுபத்து இரண்டு பேர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், எண்ணிக்கை ஆயிரத்து தொண்ணூற்று நான்கு ஆகும்.
இந்த வைரஸ் ஒரு பாக்டீரியத்தால் பரவுகிறது மற்றும் எலிகள், கால்நடைகள் மற்றும் நாய்களின் மலம் மற்றும் சிறுநீரை தண்ணீரில் கலப்பதன் மூலம் மனிதர்களுக்கு தொற்று ஏற்படலாம்.
விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் சேற்றில் இறங்குவதற்கு முன்னர் இந்த வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க அரசாங்கம் வழங்கும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உட்கொள்வது முக்கியம் எனவும் சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
நுண்ணுயிர் எதிர்ப்பிகளை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் மற்றும் பொது சுகாதார அதிகாரியிடம் பெறலாம்.
எனவே பயிர்ச்செய்கையில் ஈடுபடும் மக்கள் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என சுகாதார திணைக்களம் தெரிவிக்கின்றது.