இந்திய அணியின் தோல்வியால் பறிபோன உயிர்!

0
155

உலக கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை தாங்கமுடியாமல் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை இவ்வருடம் இந்தியா நடத்தி வந்தது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்றுள்ளனர்.

அரையிறுதிப்போட்டியில் விளையாடிய 4 அணிகளில் இருந்து 2 அணிகள் வெற்றிப்பெற்று இறுதிபோட்டிக்கு தேர்வாகியிருந்தனர்.அதில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளின் இறுதிபோட்டி நேற்றைய தினம் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் கடந்த போட்டிகளில் அபார வெற்றிகளை குவித்து வந்த இந்திய அணி நேற்றையதினம் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்திருந்தது.

இந்த சம்பவமானது ஒட்டுமொத்த இந்திய அணி ரசிகர்களையும் நிலைகுழைய செய்தது. இதனால் உயிர் பறிபோன சம்பவம் இந்தியாவின் திருப்பதி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

திருப்பதி அருகே துர்க்க சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ஜோதி குமார் என்பவருக்கே இது நிகழ்ந்துள்ளது. இவர் நேற்றைய தினம் தனது வீட்டில் இருந்து இறுதி போட்டியை பார்த்துக்கொண்டிருந்துள்ளார்.இதில் இந்தியா தோல்வியடைந்ததையடுத்து இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக குடும்பத்தார்கள் தெரிவித்துள்ளனர்.

பதறியடித்த குடும்பத்தினர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அதில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here