இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த ‘தளபதி கச்சேரி’

0
69

விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்தில் இடம்பெற்ற ‘தளபதி கச்சேரி’ பாடல் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.

கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் மேனன், ப்ரியாமணி, நரேன், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தினை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 9 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் முதல் சிங்கிளான ‘தளபதி கச்சேரி’ என்ற பாடலை படக்குழு இன்று மாலை வெளியிட்டது. வெளியான ஒரு சில மணி நேரங்களிலேயே இப்பாடல் எக்ஸ் தளத்தில் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது. பலரும் #ThalapathyKacheri என்ற ஹாஷ்டேகின் கீழ் பதிவிட்டு வருகின்றனர்.

இப்பாடல் யூடியூபில் 47 லட்சம் பார்வைகளுக்கு மேல் பெற்றுள்ளது. இப்பாடலை அறிவு எழுதியுள்ளார். அனிருத், விஜய், அறிவு மூவரும் இப்பாடலை பாடியுள்ளனர்.

HinduTmail

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here