இந்திய மீனவர்களை விடுவிக்கக்கோரி இன்று ரயில் மறியல் போராட்டம்

0
10

இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கிடையில் பலவிதமான முறுகல் நிலைகள் தொடர்ந்து வருகின்றது.

இந்நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததன் காரணமாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் அடைபட்டிருக்கும் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி இன்று (19) விசைப்படகு மீனவ சங்கம் சார்பாக மாலை 4.00 மணி மணிக்கு போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

ராமேஸ்வரத்திலிருந்து புறப்படும் தாம்பரம் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பில் நேற்று (18) ராமேஸ்வரம் வட்டார ஆட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் குறித்த மீனவர்களுடன் பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றது.

ஆனால், மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை.

பேச்சுவார்த்தையின் பின்னர் வெளியே வந்த மீனவர்கள் திட்டமிட்டபடி இன்று (19) ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here