இந்தியா உத்தரகாண்ட் மாநிலம் கவுரிகுந்த் அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) டேராடூனில் இருந்து கேதார்நாத் நோக்கிச் சென்ற ஹெலிகொப்டர் காணாமல் போனதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
காணாமல் போன ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதை உத்தரகாண்ட் சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் ஜெனரல் (ஏடிஜி) முருகேசன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் அந்த ஹெலிகொப்டரில் பயணம் செய்த அனைவரும் (7 பேர்) இறந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் விமானி மற்றும் 5 பெரியவர்கள், 1 குழந்தை இருந்ததாக தெரியவந்துள்ளது.