உத்தியோகபூர்வ விஜயமாக கானாவுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. இரு நாடுகள் இடையே ஆயுர்வேதம், பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜூலை 6, 7 ஆம் திகதிகளில் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க செல்லும் வழியில் கானா, டிரினிடாட் அன்ட் டொபாகோ, அர்ஜென்டினா, நமீபியா ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
முதல்கட்டமாக, மேற்கு ஆபிரிக்க நாடான கானா தலைநகர் அக்ராவுக்கு பிரதமர் மோடி கடந்த 2 ஆம் திகதி சென்றார். கானா ஜனாதிபதி ஜான் டிராமணி மகாமாவை அவர் நேற்று சந்தித்தார். அப்போது இரு நாடுகள் இடையே கலாச்சாரம், தரநிலை சான்று, ஆயுர்வேதம், பாரம்பரிய மருத்துவம் தொடர்பாக 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.