இந்தியா, சிங்கப்பூரிடையில் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

0
21

பிரதமர் நரேந்​திர மோடியை சிங்​கப்​பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் டெல்​லி​யில் நேற்று சந்​தித்​து பேசி​னார். அப்​போது இந்​தி​யா, சிங்​கப்​பூர் இடையே 5 முக்​கிய ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின.

சிங்​கப்​பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் 3 நாட்​கள் பயண​மாக டெல்லி வந்​துள்​ளார். அவருடன் வெளி​யுறவுத் துறை அமைச்​சர் விவியன் பால​கிருஷ்ணன், நிதித் துறை அமைச்​சர் ஜெப்​ரி, வர்த்தக துறை அமைச்​சர் கான் சியோ {ஹவாங் ஆகியோ​ரும் இந்​தியா வந்​துள்​ளனர்.

பிரதமர் நரேந்​திர மோடியை டெல்​லி​யில் நேற்று அவர் சந்​தித்​து பேசி​னார். அப்​போது இந்​தி​யா, சிங்​கப்​பூர் இடையே 5 முக்​கிய ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின.

குறிப்​பாக சுற்​றுச்​சூழலுக்கு மாசு இல்​லாத கப்​பல் போக்​கு​வரத்​து, விமான போக்​கு​வரத்து பயிற்​சி, செமி கண்​டக்​டர் உள்​ளிட்ட துறை​களில் திறன்​சார் பயிற்​சி, செயற்​கைக்​கோள் தகவல் பரி​மாற்​றம், வங்​கி, முதலீடு சார்ந்த தகவல் பரி​மாற்​றம் ஆகியவை தொடர்​பாக ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகி உள்​ளன.

இதன்​பிறகு இரு தலை​வர்​களும் கூட்டாக நிருபர்​களுக்கு பேட்டி அளித்​தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட பிரதமர் மோடி,

‘தென்​கிழக்கு ஆசிய பிராந்​தி​யத்​தில் இந்​தி​யா​வின் மிகப்​பெரிய வர்த்தக கூட்​டாளி​யாக சிங்​கப்​பூர் விளங்​கு​கிறது. பாது​காப்பு துறை​யில் இரு நாடு​கள் இடையி​லான உறவு வலு​வடைந்து வரு​கிறது.

பசுமை கப்​பல் போக்​கு​வரத்​து, திறன் மேம்​பாடு, சிவில் அணு சக்​தி, நகர்ப்​புற நீர் மேலாண்​மை, செமி கண்​டக்​டர் உற்​பத்​தி, தொழில்​நுட்​பம், புதுமை கண்​டு​பிடிப்​பு, செயற்கை நுண்​ணறி​வு, குவாண்​டம், டிஜிட்​டல் தொழில்​நுட்​பம், விண்​வெளி ஆகிய துறை​களில் இரு நாடு​களும் இணைந்து செயல்​படும்.” – என்று குறிப்பிட்டார்.

இந்​திய, பசிபிக் பிராந்​தி​யத்​தில் அமை​தி, ஸ்திரத்​தன்​மையை நிலை​நாட்​டு​வ​தில் இந்​தி​யா​வும் சிங்​கப்​பூரும் இணைந்து செயல்​படும். சிங்​கப்​பூர் மற்​றும் ஆசி​யான் கூட்​டமைப்​புடன் ஒத்​துழைப்பு மேம்​படுத்​தப்​படும். சர்​வ​தேச தீவிர​வாதத்​துக்கு எதி​ராக இரு நாடு​களும் இணைந்து செயல்​படும். பஹல்​காம் தாக்​குதலை கண்​டித்த சிங்​கப்​பூர் அரசுக்கு மனதார நன்றியை தெரி​வித்​துக் கொள்​கிறேன் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here