ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் இந்தியாவுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இதனால் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கு இடையிலான உறவுகள் பிபாதிக்கப்படுமா என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில் ‘‘இந்தியா – ரஷ்யா உறவு வலுவானது. மூன்றாம் நாட்டின் தலையிட்டால் இந்த உறவு பாதிக்கப்படாது என இந்திய மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
இதேபோல இந்தியா – அமெரிக்கா உறவும் வலுவடைந்து வருகிறது. நாட்டின் நலனுக்கு தேவையான பாதுகாப்பு கொள்கையை கடைபிடித்து வருகிறோம்’’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அமெரிக்க வரி கொள்கையினால் அமெரிக்கர்களின் வீட்டு செலவு அதிகரிக்கும் இதற்கிடையே, அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு நடவடிக்கையால் பணவீக்கம் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.