வரும் 1ம் தேதி இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் போட்டி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.
ஒருவேளை இந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால் வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். இரு அணிகளும் தற்போது 2 புள்ளிகளை பெற்றுள்ளன . போட்டி ரத்தானால், தலா ஒரு புள்ளி வழங்கப்படும். இதனால் ரன் ரேட்டில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை பெற்றுள்ளதால் வெஸ்ட் இண்டீஸ் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இருப்பினும் கொல்கத்தாவில் போட்டி நடைபெறும் நாளில் மழைக்கு வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.