இந்துக்களின் மிக முக்கிய விரதங்களில் ஒன்றான நாளை ஆனுஸ்டிக்கப்படவுள்ள மகா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு இந்தியாவின் மூன்று ஜோதிலிங்களின் மாதிரி ஜோதிலிங்கம் தரிசனமும்,படவிளக்க கண்காட்சியும் இன்று ஹட்டன் சுற்றுவட்ட வீதியில் உள்ள பிரம்ம குமாரிகள் நிலையத்தில் காட்சிக்காக இன்று 17 ம் திகதி காலை 10 அளவில் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த மூன்று சிவலிங்கங்களுக்கு விசேட பூஜைகளை தொடர்ந்து பொது மக்களின் தரிசனத்திற்காக காட்சிப்படுத்தப்பட்டது.
பூஜை வழிபாடுகளை சிவஸ்ரீ வேலுசுரேஸ்வர சர்மா நடத்தி வைத்தார்.பூஜை வழிபாடுகளை தொடர்ந்து படவிளக்க கண்காட்சி இடம்பெற்றதுடன்,பிரம்ம குமாரிகள் நிலையம் பற்றிய ஒரு ஆவனப்பட கானொளி இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து தியான பயிற்சிகள் நடைபெற்றன மக்களின் குறைத்தீர்க்கும் அக்கினி குண்டம் ஆகியன இடம்பெற்றது.
குறித்த நிகழ்வுக்கு ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவர் பாலச்சந்திரன்,பிரதேச வாசிகள்,பிரம்ம குமார்கள் நிலையத்தின் அங்கத்தவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதே நேரம் மகா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு பிரதிஷ்டை செய்வதற்காக தலவாக்கலை சென்கூம்ஸ் தோட்டத்தில் கடந்த 13 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஜோதிலிங்க ரத பவனி ஐந்தாவது நாளாக இன்று காசல்ரி பிரதேசத்தை வந்தடைந்துள்ளது. குறித்த ஜோதிலிங்கம் இன்று டிக்கோயா பகுதியில் உள்ள ஆலயங்களுக்கு சென்று நாளை ஹட்டன் பிரதேசத்தில் ரதபவனி இடம்பெறவுள்ளது.
இந்த ரத பவனி எதிர்வரும் 22 ம் திகதி நல்ல தண்ணீர் லக்ஸபான பிரதேசத்தில் விசேட கண்காட்சி கூடத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மலைவாஞ்ஞன்