இந்தியாவிலிருந்து இலங்கை வந்தவர்களுக்கு உதவித்தொகை!

0
17

உள்நாட்டு போர் காரணமாக இடம்பெயர்ந்து சென்று, இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனால் நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் மேலதிக செயலர் (காணி) க.ஸ்ரீமோகனன், OfERR (Ceylon) இணைப்பாளர் இ. பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

UNHCR நிறுவனத்தால் OfERR (Ceylon) நிறுவனம் தெரிவு செய்யப்பட்டு – அந் நிறுவனத்தால் இதற்கான உதவித்தொகை தலா 90 ஆயிரம் ரூபாய் வீதம் வேலணை மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் மீளத் திரும்பிய ஆறு பேருக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here