இந்தியாவில் மற்றொரு பயங்கர ரயில் விபத்து

0
171

இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் இன்று (30) காலை இடம்பெற்ற புகையிரத விபத்தில் 9 பயணிகள் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசாகப்பட்டினத்தில் இருந்து பலாசா நோக்கி இயக்கப்படும் சிறப்பு பயணிகள் ரயில் பழுதடைந்ததால், நிறுத்தப்பட்டிருந்த ரயில் மீது விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மோதியது.

எவ்வாறாயினும், சமிஞ்ஞை கோளாறு காரணத்தினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.இதற்கு சில மாதங்களுக்கு முன்பு சமிஞ்ஞை கோளாறு காரணமாக, ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதியதில் 280-க்கும் மேற்பட்ட பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here