உலகில் அடிக்கடி வெடிப்பிற்கு உள்ளாகும் எரிமலைகளில் ஒன்றான இந்தோனேசியாவின் லெவோடோபி எரிமலை வெடித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 8:48 மணியளவில் எரிமலை வெடித்ததாக இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தோனேசிய எரிமலையியல் ஆய்வு மையம், குறித்த எரிமலையிலிருந்து 10 கி.மீ உயரத்தில் சாம்பல் புகை பறப்பதாக தெரிவித்துள்ளது.
இதேநேரம், இந்த நேரத்தில் பலத்த மழை பெய்தால், எரிமலையின் பள்ளத்திலிருந்து 6-7 கி.மீ பரப்பளவில் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர், மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் எரிமலையிலிருந்து வரும் எரிமலைக்குழம்பு நிலச்சரிவை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எரிமலையின் வெடிப்பு சமீப காலங்களில் பல சந்தர்ப்பங்களில் பதிவாகியுள்ளது, மேலும் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெடிப்புகள் காரணமாக பாலி தீவுக்கு செல்லும் பல சர்வதேச விமானங்களை தாமதப்படுத்தவும் ரத்து செய்யவும் நேர்ந்தது.
அதிகளவிலான தீவுக்கூட்டத்தைக் கொண்ட இந்தோனேசியா, அடிக்கடி நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளுக்கு ஆளாகிறமை குறிப்பிடத்தக்கது.