இன்று (01) 22 ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊழியர் பற்றாக்குறையே இதற்குக் காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய எரிபொருள் பிரச்சினை காரணமாக ஊழியர்கள் கடமைக்கு சமுகமளிக்காததால் இந்த ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில அலுவலக நேர ரயில் சேவைகளும் இவற்றில் அடங்கும். கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வரை ஆசனங்கள் முன்பதிவு செய்யப்பட்டு பயணிக்கும் உதயதேவி ரயில் சேவையும் ரத்துச் செய்யப்பட்டுள்தளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து. ரம்புக்கனை, மீரிகம, வெயாங்கொடை வரையான சில அலுவலக நேர ரயில்சேவைகள், சிலாபம், பாணந்துறை, வாதுவ வரையிலான சில ரயில் சேவைகள், அவிசாவளை வரையிலான சரக்கு ரயில் சேவை ஆகியனவும் ரத்துச் செய்யப்படடுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.