புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் நியமிக்கப்படவுள்ள 4 அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய தினேஷ் குணவர்தன, பிரசன்ன ரணதுங்க, கஞ்சன விஜேசேகர, ஜி.எல்.பீரிஸ் ஆகியோரே இவ்வாறு பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சபைத் தலைவராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்படவுள்ளதாகவும், பிரதம கொறடாவாக பிரசன்ன ரணதுங்கவும் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் எதிர்வரும் 17 ஆம் திகதி பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்து கொள்ளப்படும் என அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.