இன்றுடன் முடிவடையும் லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விநியோகம்!

0
249

லிட்ரோ கேஸ் லங்கா வசம் இருக்கும் எரிவாயு இருப்பு நாளை (22) இரவுக்குள் முடிவடையும் என்று எரிவாயு நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.கெரவலபிட்டியவில் உள்ள லிட்ரோ எரிவாயு சேமிப்பு முனையத்தில் இன்று இரவு வரை எரிவாயு விநியோகிக்கப்படும் என்றும், நாளை 100,000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என்றும் அந்த அதிகாரி கூறியதாக லங்காதீப பத்திரிகை தெரிவித்துள்ளது.

3500 மெட்ரிக் தொன் திரவ வாயுவை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று இன்று (21) இரவு இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவித்த அவர், கையிருப்பு மூன்று நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இலங்கையின் மாதாந்த எரிவாயு தேவை 35,000 மெட்ரிக் டன் எனவும், மாதாந்தம் 10,000 மெட்ரிக் டன் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இன்றும் நாடு முழுவதும் காஸ் சிலிண்டர்களுக்காக நீண்ட வரிசையில் காத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏறக்குறைய 500 எரிவாயு சிலிண்டர்கள் தேவைப்பட்ட போதிலும், சில சில்லறை விற்பனையாளர்கள் 50 சிலிண்டர்களை மட்டுமே விநியோகம் செய்து பொதுமக்களிடையே பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here