மசகு எண்ணெய் இன்மையால், சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம், இன்று ஞாயிற்றுக்கிழமைமுதல் மீளவும் மூடப்பட உள்ளதாக இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னரும், போதுமான அளவு மசகு எண்ணெய் கிடைக்காமையால், 2 சந்தர்ப்பங்களில், சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டிருந்தது.