ஹட்டன் டிக்கோயா வனராஜா பகுதியில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்து சிதறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனராஜா கீழ் பிரிவு தோட்டத்தில் தொடர் குடியிருப்பு ஒன்றில் உள்ள வீடு ஒன்றில் இன்று காலை 7.30 மணியளவில் சமையலில் ஈடுப்பட்டுகொண்டிருக்கும் போது குறித்த அடுப்புடன் இணைக்கும் பகுதி வெடித்து சிதறியதாக வீடு உரிமையாளர் தெரிவித்தார்.
இந்த வெடிப்பு சம்பவத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் எதுவும் ஏற்படாத போதிலும் அடுப்பு சேதமடைந்தாகவும் எரிவாயு கொள்கலனிலிருந்த எரிவாயு முழுமையாக கசிந்துள்ளதாகவும் வீட்டு உரிமையாளர் தெரிவிதிதார். சம்பவம் தொட்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கே.சுந்தரலிங்கம் .