மேஷம்
குடும்பத்தலைவிகளுக்கு வீட்டில் தங்கள் பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். தம்பதிகளிடையே அன்பு பெருகும். பயணங்களின் போது தலைகவசம் அணியவும் மற்றும் செல்போன் பேச வேண்டாம். அரசியல்வாதிகள் தங்கள் செயல்களில் கொள்கையுடன் செயல்படுவர். வெளிநாட்டவர் மற்றும் வேற்றுமொழிக்காரர்களால் ஆதாயம் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
ரிஷபம்
வெளியூர் பயணம் வெற்றி தரும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். மாமியார் மருமகள் உறவு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாகும். வேலை தேடுபவர்களுக்கு நேர்முக தேர்வில் வெற்றிப் பெறுவர். பெண் அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் உயரும். வாகன பராமரிப்பு செலவு சற்று அதிகமாகும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
மிதுனம்
தொலைந்து போன பொருள் மீண்டும் வந்தடையும். வீட்டில் அமைதி ஏற்படும். கணினி துறையில் உள்ளவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பெரிய ப்ராஜக்ட் கிடைக்கும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு கூடுதல் அலைச்சல் ஏற்பட்டாலும் அதற்கேற்ப ஊதியம் உண்டு. பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா




