இன்றைய ராசிபலன் (02.03.2026): புதிய திட்டங்கள் வெற்றி பெறும் நாளாக அமையும்..!

0
6

மேஷம்

இன்று புது அணுகுமுறை உங்களுக்கு வெற்றி தரும். பண வரவு சீராக இருக்கும். தொழிலில் புதிய வாய்ப்பு கிடைக்கும். உறவுகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு சாதக நாள். ஆரோக்கியம் மேம்படும். சமூகத்தில் மதிப்பு உயரும். பங்குச் சந்தை பயணளிக்கும். ஆரோக்கியம் மேம்படும். மாலை நேரம் மகிழ்ச்சி.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

ரிஷபம்

இன்று மன அமைதி அதிகரிக்கும். புதிய முயற்சி வெற்றி பெறும். பணவரவு உயரும். குடும்பத்தில் சுப நிகழ்வுக்கான பேச்சு வார்த்தை நிகழும். தொழிலில் படிப்படியான முன்னேற்றம் இருக்கும். குறுகிய தூர பயணம் நன்மை தரும். ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும்.. குடும்பத்துடன் வீட்டில் அனைவரும் ஒன்றுகூடி மகிழ்வர்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

மிதுனம்

இன்று கடின உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும். பணத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும். தொழிலாளர்களுக்கு தொழிலதிபர்களின் பாராட்டு கிடைக்கும்.. உறவுகள் மேம்படும். சில புதிய திட்டங்கள் வெற்றி பெறும் நாளாக அமையும். ஆரோக்கியத்தில் குறைவு இல்லை. ஒரு சிலருக்கு வெளிநாடு பயணம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கடகம்

இன்று பொறுமை தேவைப்படும் நாள். சிறு தடைகள் வந்தாலும் கடந்து செல்வீர்கள். மன அமைதியை காப்பது நல்லது/ பண விஷயத்தில் திட்டமிடல் அவசியம். குடும்பத்தில் நல்ல புரிதல் ஏற்படும். தொழிலில் புதிய மாற்றம் உண்டு. நீண்ட தூர பயணம் நன்மை தரும். மாணவர்களுக்கு பாராட்டுகள் குவியும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

சிம்மம்

இன்று குறுகிய தூர பயணங்கள் அதிகரிக்கும் நாளாக அமையும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். பண வரவு மேம்படும்.

உறவுகளில் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை.தொழிலில் சில மாற்றங்கள் செய்வீர்கள். மாணவர்களுக்கு சாதனை செய்யும் நாளாக அமையும். ஆரோக்கியம் சீராகும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கன்னி

இன்று தொழிலில் நல்ல முன்னேற்றம் தென்படும். பணவரவு உயர்வு. உறவுகளில் புரிதல் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்த கொள்வீர்கள். கோவில் திருவிழாவில் கலந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்டவைகளில் முன்னேற்றம் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

துலாம்

இன்று தைரியம் பிறக்கும். உங்கள் துணிவால் சாதனைப் படைப்பீர்கள். பணியில் பெரிய முடிவு எடுப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். உறவுகளில் நெருக்கம் கூடும். புதிய வாய்ப்பு தேடி வரும்.சமூகத்தில் மதிப்பு உயரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வழக்கறிஞர்களுக்கு வெற்றி உங்கள் பக்கம் திரும்பும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

விருச்சிகம்

இன்று காதலர்கள் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது முக்கியம். மாறாக, குடும்ப முன்னேற்றத்தை சிந்திப்பது நல்லது.. பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். புதிய முயற்சி பலிக்கும். சிறிய உடல்நல பிரச்சனை கவனிக்கவும். பழைய நண்பர்களின் மகிழ்ச்சியான சந்திப்பு ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

தனுசு

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் இருந்து வந்த சிரமங்கள் நீங்கும். நிம்மதியற்றவர்கள் கோயிலுக்குச் சென்றால் மனஅமைதி உண்டாகும். பெண்களுக்கு நல்ல வரன் அமையும். பாகப்பிரிவினை சுமுகமாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மகரம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கும்பம்

இன்று தங்கள் தன்னம்பிகை உங்களுக்கு பலம் சேர்க்கும் . நீண்டநாள் முயற்சி பலன் தரும் நாள். பண விஷயங்களில் சிந்தித்து முடிவு செய்யுங்கள். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு தீரும். புதிய பொருள் வாங்கும் யோகம் உள்ளது. தொழிலில் பாராட்டு கிடைக்கும். மாணவர்களுக்கு முன்னேற்றம் உறுதி. ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மீனம்

இன்று பிரபலங்களின் சந்திப்புகள் நல்ல முடிவுகளை தரும். புதிய தொடர்புகள் பயன் அளிக்கும். பணவரவு மிதமான அளவில் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன மகிழ்ச்சிகள் உண்டு. பயணம் சாத்தியம். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். மனஅழுத்தம் குறையும். தெய்வ அருள் துணை நிற்கும் நாள். மாணவர்களின் நினைவுத்திறன் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here