இன்றைய ராசிபலன் (21.02.2026) : புதிய வாய்ப்புகள் கிடைக்கும்!

0
19

மேஷம்

அடுத்தடுத்த செலவுகளால் பணப்பற்றாக்குறை இருந்து கொண்டேயிருக்கும். திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். கணினித் துறையில் உள்ளவர்கள் ஆதாயம் காணலாம். பெரியவர்களின் உடல் ஆரோக்கியம் சிறப்படையும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையை கையாண்டு அதிக லாபத்தினை ஈட்டுவீர்கள். தேகம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம் சிவப்பு

ரிஷபம்

உத்யோகஸ்தர்களுக்கு சம்பள பாக்கி கைக்கு வரும். சுபகாரியம் விரைவில் கூடி வரும். உத்யோகத்தில் நெருக்கடி தந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். பிள்ளைகளைப் பற்றிய கவலைகள் விலகும். புதிய வாய்ப்புகள் கிடைத்து தங்களுக்கு திருப்புமுனை உண்டாகும் நாள். ஆரோக்கியம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம் சாம்பல்

மிதுனம்

வெளியூர் பயணம் வெற்றி தரும். பிடித்தவர்களின் எதிரபாராத சந்திப்பு நிகழும். அதனால் மனதில் எல்லையற்ற மகிழ்வு கிடைக்கும். மன நிம்மதி அதிகரிக்கும். வியாபாரத்தில் திருப்புமுனை உண்டாகும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சுபச் செலவுகள் அதிகமாகும். தேகம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

கடகம்

பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். இளைஞர்கள் காதலில் எச்சரிக்கையாக இருப்பது நலம். குடும்பத்தில் விவாதம் வந்துப் போகும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. குடும்பக் கடமைகளை முடிப்பது நல்லது. ஆன்லைன் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். அக்கம் பக்கம் வீட்டார் உதவுவர். சைனஸ் தொந்தரவு வநது போகும்.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

சிம்மம்

விற்பனை பிரதிநிதிகள் தாங்கள் எதிர்பார்த்த ஆர்டர்களை எடுத்து முடிப்பர். வேற்றுமதத்தவர் உதவுவார். பெண்களுக்கு வேலை கிடைக்கும். சுமாரான வேலையில் இருப்பவர்கள் பெரிய நிறுவனத்தில் நல்ல பதவியில் அமருவார்கள். மருத்துவ செலவுகளுக்கும் இடம் உண்டு. பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் நீலம்

கன்னி

தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை அதாவது தங்கள் தொழில் சார்ந்தவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் சந்திராஷ்டமம் என்பதால் சாதாரணமாக பேசும் வார்த்தைகள் கூட பிரச்சினையைத் தந்து நிரந்தரமாக பேசாமல் போக வாய்ய்புள்ளதால் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் பச்சை

துலாம்

நீண்ட நாட்களாக இருந்த கோரிக்கைகள் தங்கள் அலுவலகத்தில் நிறைவேறும். தேக்க நிலையில் இருந்த நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள் முடிவுக்கு வரும். அதில் உங்களுக்குரிய பங்கு வந்து சேரும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் ஊதா

விருச்சிகம்

விருந்தினர் வருகை அதிகரிக்கும். வழக்கறிஞர்களுக்கு தங்கள் வழக்குகள் தள்ளிபோகும். இதுவரை தேடிய வரன் நல்லபடியாக அமையும். பிள்ளைகள் நன்கு படிப்பர். சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் பணம் வரும்.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

தனுசு

தங்கள் காரியத்தடைகளெல்லாம் நீங்கி பணவரவு உண்டாகும். புகழ் பெற்றவர்களின் நட்பு உண்டாகும். எதிரிகள் நண்பர்களாவர். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். வீடடுக் கடனில் ஒரு பகுதியை அடைத்து விடுவீர்கள். அலுவலகத்தில் உள்ள நீண்ட நாள் பிரச்சினை தீரும். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் கடல் நீலம்

மகரம்

ஆன்மீகத்தில் மனம் நாடும். கோவில் யாத்திரை செய்வீர்கள். மனம் அமைதியுறும். உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துபோவது நல்லது. அரசு காரியங்களில் அனுகூலம் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேறும். பணப்புழக்கம் நன்கு இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் சாம்பல்

கும்பம்

வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவர். சொத்து தொடர்பான விசயங்களில் தங்களுக்கு சாதகமாக அமையும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். மகளின் திருமணத்தைப் பற்றி முடிவெடுப்பர். பண விஷயத்தில் சிக்கனம் தேவை. யோகாவில் மனம் லயிக்கும். மருத்துவர்களுக்கு பதவி உயர்வுண்டு.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

மீனம்

வெளியிடங்களில் உணவு உட்கொள்ள வேண்டாம். கூடுமானவரை வீட்டு சாப்பாடு மிகவும் நல்லது. வீடடிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பிரிந்த உறவினர் உங்களை தேடி வருவார்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். அவர்கள் போக்கே சென்று அவர்களை உங்கள் வழியில் வரவழையுங்கள். சில சமயம் தங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும்.

அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here