மேஷம்
எதிர்பார்த்த பணம் கிடைக்கும். தங்கள் குடும்பத்தில் உள்ள நல்ல விசயங்களுக்கு தம்பதிகள் முடிவெடுத்து செயல்படுவர். நினைத்த காரியம் வெற்றி பெறும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்த எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கித் தருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறைத் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
ரிஷபம்
வழக்குகளில் வெற்றி கிட்டும். தங்கள் வங்கியில் டெபாசிட் உயரும். வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட கூடுதல் முயற்சி அவசியம். ஆரோக்கியம் மேம்படும். மாணவர்களின் எண்ணம் ஈடேறும். யோகா மற்றும் நடன வகுப்புகளில் மனம் நாடும். அதற்குண்டான முயற்சிகள் பலிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
மிதுனம்
விரும்பிய பொருள் வாங்குவீர்கள். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். காதலர்களிடையே ஊடல் விலகும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் நெருக்கமாவர். வீடு, மனை உங்கள் ரசனைக்கேற்ப அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை
கடகம்
குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் செல்வீர். தந்தைவழி உறவு முறைகளால் சிறிது நன்மையை எதிர்பார்க்கலாம். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். தம்பதிகளின் கருத்து ஒற்றுமை ஓங்கும். பூர்வீக சொத்தில் தங்கள் பங்கு கிடைக்கும். கூட்டுவியாபாரிகளிடையே நல்லிணக்கம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
சிம்மம்
நட்பு வட்டம் விரிவடையும். பூர்வீக சொத்தில் உள்ள வில்லங்கம் நீங்கும். தங்கள் பங்கு கைக்கு கிடைக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரண் கிட்டும். உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும். பொது இடத்தில் வெளிப்படையாகப் பேசி சிக்கிக் கொள்ள வேண்டாம். பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கன்னி
உத்யோகத்தில் வரவேண்டிய பாக்கித் தொகை வந்து சேரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். மருத்துவர்கள் சாதனை படைப்பர். மாணவர்களின் முயற்சிகள் பலிதமாகும். விளையாட்டு வீரர்கள் பதக்கம் பெற்று தாய்நாடு திரும்புர். பழுதான வாகனம் சரியாகும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவர்.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்




