உலகளாவிய ரீதியாக இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்ற இரு பண்டிகைகளில் ஒன்றே ஈதுல் அல்ஹா எனப்படும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்.
இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவு கூரும் விதமாக, இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல் ஹஜ் மாதம் பிறை 10இல் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவு கூரும் ஹஜ்பெருநாள் தொழுகை ஹட்டன் ஜூம்மா பள்ளிவாசலில் மௌலவி சாஜகான் தலைமையில் மிக சிறப்பாக இடம்பெற்றது.
இதில் பிரதேசத்தில் உள்ள இஸ்லாமிய பக்தர்கள் மிகவும் சமயத்திற்கு மதிப்பளித்து மிகவும் உணர்வு பூர்வமாக தொழுகையில் ஈடுப்பட்டனர்.
இதில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சாந்தி சமாதானம் சகவாழ்வு வேண்டியும் நாடு வளபெற வேண்டியும் துவா பிராத்தனையும் இடம்பெற்றது.
பெருநாள் தொழுகையினை தொடர்ந்து ஒருவருக்கு கட்டித்தழுவி பெருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.
மலைவாஞ்ஞன்