இரண்டாவது வெற்றியுடன் தொடரை கைப்பற்றிய தென் ஆபிரிக்க.

0
186

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபது20 போட்டியில் தென் ஆபிரிக்க அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

கொழும்பு ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இலங்கை அணி 18.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 103 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி வீரர்கள் பிரகாசிக்க தவறியிருந்த நிலையில் அதிகபட்சமாக குசல் ஜனித் பெரேரா 30 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் தென் ஆபிரிக்க அணியின் எய்டன் மர்க்ரம் (21 – 3)மற்றும் தப்ரைஸ் ஷம்சி (20 -3) தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்நிலையில், 104 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 14.1 ஓவர்களில் .1 விக்கெட்டை மாத்திரம் இழந்து 105 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.

அணியின் சார்பில் அதிகபடியாக க்வின்டன் டி கொக் 58 ஓட்டங்களைப் பெற்றார்.

அதற்கமைய, 3 போட்டிகளைக் கொண்ட இந்த இருபது 20 தொடரை 2-0 என்ற அடிப்படையில் தென் ஆபிரிக்க அணி கைப்பற்றியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here