இரண்டு மகள்களை கொன்றுவிட்டு நடுத்தர வயது தாயார் தற்கொலை

0
263

தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில் காவல்துறை தீவிர விசாரணை. தமிழகத்தில் இரண்டு டீன் ஏஜ் வயதுடைய மகள்களை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாக்குமரி மாவட்டம் அஞ்சுகிராமமத்தை சேர்ந்தவர் ஏசுதாசன். இவரது மனைவி 46 வயதான அனிட்டா

இவர்களுக்கு சகாய திவ்யா(19), சகாய பூஜா மெளலியா (16) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

ஏசுதாசன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இரண்டு மகள்களையும் அனிட்டா வளர்த்து வந்தார்.

நேற்று வழக்கம்போல் இரவு சாப்பிட்டுவிட்டு 3 பேரும் தூங்க சென்றனர். இன்று அதிகாலையில் அனிட்டா வீட்டிற்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவர் வந்துள்ளார். அப்போது, அனிதாவின் வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது.

சிறிது நேரம் கழித்து மற்றொரு நபர் வந்தபோதும் கதவு பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் அந்த பகுதியினிடையே சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது, அனிட்டா மற்றும் அவரது 2 மகள்களும் தூக்கில் பிணமாக தொங்கினார்கள்.

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

2 மகள்களையும் தூக்கில் தொங்கவிட்டு கொன்று, அனிட்டா தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது.

இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here