ஹட்டன் பகுதியில் இரண்டு மாதத்திற்கு பின் லிட்ரோ வீட்டு சமையல் விநியோகம் இன்று (15) திகதி இடம்பெற்றது. ஹட்டன் பகுதியில் கடந்த காலங்களில் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகத்தின் போது பல்வேறு மோசடிகள் இடம்பெற்றமையினாலும் பலருக்கு சமையல் எரிவாயு பெற்றுக்கொள்ள முடியாது போனமையினாலும் அம்பகமுவ பிரதேச செயலாளர் சித்தார ரூவனி கமகே தலைமையில் வீட்டு மின்சார பட்டியலுக்கேற்ப கடந்த மே மாதம் டோக்கன்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
முதலாவது தொகுதி கடந்த மே வருகை தந்த போதிலும் இரண்டாவது தொகுதி இன்றைய தினமே விநியோகம் செய்யப்பட்டன. இன்றைய தினத்தில் சமையல் எரிவாயு பெற்றுக்கொள்ள வேண்டும் இலக்கங்கள் மற்றும் கடைகளில் பெயர் விபரங்கள் ஆகியன ஒரு சமையல் எரிவாயு விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன் இந்த செயப்பாட்டிக்கு உதவுவதற்காக கிராம சேவகர்களும் ஈடுப்படுத்தப்பட்டிருந்தன.
குறித்த விநியோகம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள டோக்கன் முறைக்கு அமையவே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தன. இதனால் இன்று எரிவாயு விநியோகம் மிகவும் சுமுகமான முறையில் நடைபெற்றதுடன் பெரியதாக நீண்ட வரிசைகளும் காணப்படவில்லை. எரிவாயு பெற்றுக்கொள்வதற்காக தொலைபேசியின் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தவர்கள் மாத்திரம் தான் வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதே நேரம் கடந்த மூன்று தினங்களாக ஹட்டன் ஐஓசி பெற்றோல் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் பெற்றோலுக்காக காத்திருக்கின்றனர்.
இவ்வாறு வரிசையில் காத்திருப்பவர்களுக்கு ஹட்டன் பொலிஸாரால் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. பெற்றோல் பெற்றுக்கொள்வதற்காக எண்ணை நிரப்பு நிலையத்திலிருந்து மல்லியைப்பூ சந்தி வரை முச்சக்கரவண்டி மற்றும் வாகனங்களும்,மோட்டார் சைக்கில்கள் டன்பார் வீதியிலும் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மலைவாஞ்ஞன்




