இரத்தினபுரி பின்னவள தோட்ட இளைஞர் யுவதிகள் மீதான தாக்குதல்_சம்மந்தப்பட்டவர்கள் கைது!

0
198

இரத்தினபுரி பின்னவள தோட்ட இளைஞர், யுவதிகள் பெரும்பான்மையினரால் தாக்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விரைந்து செயற்பட்டு உடனடி நடவடிக்கை எடுத்ததன் காரணமாக சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

தொழில் நிமித்தம் பலாங்கொடையில் இருந்து பொகவந்தலாவைக்கு செல்லும் போது இரத்திதினபுரி பின்னவள தோட்ட இளைஞர் யுவதிகள் பெரும்பான்மையினரால் தாக்கப்பட்டிந்த சம்பவத்துக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டிருந்த இளைஞர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க இதொகா நடவடிக்கையை எடுத்து.

இதன் காரணமாக சம்பவத்துடன் தொடர்புப்பட்டவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சம்பவமத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க இதொகா தொடர்ந்து செயல்படும் என்பதுடன் பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவும் முனைப்புடன் செயல்படும்.

மேலும் இச்சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பதற்ற நிலை ஏற்படாமல் இருக்க , உரிய பாதுகாப்பை நேற்று இரவு வழங்க பொலிஸ் மா அதிபரிடம் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here