இரத்தினபுரி ஹபுகஸ்தென்ன தோட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு!

0
164

கொவிட் – 19 நோய் பரவலைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அவதியுறும் மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண தொகை கிடைக்கப்பெறாத குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளடங்கிய நிவாரண பொதிகளை வழங்கும் வேலைத்திட்டம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆலோசனைக்கமைய இரத்தினபுரி, ஹபுகஸ்தென்ன தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் அவர்கள் தெரிவித்தார்.

குறித்த தோட்டத்தை சேர்ந்த கொவிட் -19 நோய்த் தொற்றளர்கள் உள்ளிட்ட 65 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பிரதேசத்தில் அன்றாட வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபசெயலாளர் ரூபன் பெருமாள் வேண்டுகோளுக்கிணங்க கௌரவ அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களால் நிவாரணப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இதன்போது இரத்தினபுரி பிரதேச சபை உறுப்பினர் பழனி உதயகுமார், இ.தொ.கா இளைஞர் அணி அமைப்பாளர்களான வினோதன் செல்லதுரை, வசந்த் நடராஜ், சிவனு திருச்செல்வம் மற்றும் ராமன் ரஜிதகாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here