அரசாங்கம் மனிதப்படுகொலை செய்வதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இரம்புக்கனையில் அரசாங்கம் காட்டிய சமிஞ்ஞை, ஏனைய போராட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இரம்புக்கனையில் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் பவுசருக்கு தீ வைக்க வந்தவர்கள் அல்ல. இந்த அரசாங்கம் போராட்டக்காரர்களை ஒடுக்க நினைகிறது. இதுவொரு மனிதர்களை படுகொலை செய்யும் அரசு.
இன்று ரம்புக்கனையில் கொடுத்த சமிக்ஞையானது நாடு முழுவதும் இடம்பெறும் போராட்டத்திற்கு அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கையாகவே
நாம் பார்க்கிறோம்.
இரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள யார் அனுமதி வழங்கியது. இரம்புக்கனை சம்பவத்தை முழுமையாக விசாரிக்குமாறு பொலிஸ்மா அதிபர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் இந்த விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
ஓய்வுபெற்ற நீதியரசர்களை கொண்டு முழுமையான விசாரணைக் குழுவொன்றை நியமிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
மிரிஹானையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது அங்கிருந்த பஸ் மீதும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களே தீ வைத்தனர்’என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கருத்து வெளியிட்டார்.