இரா.சம்பந்தனை பதவி நீக்க குழு நியமனம் – மறுத்த எம்.ஏ சுமந்திரன்!

0
189

இரா.சம்பந்தனை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் கூடிய இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில், இது தொடர்பாக கலந்துரையாடப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்தும், நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்தும் இரா.சம்பந்தனை விலக்குவதற்காக அவருடன் கலந்துரையாட மத்திய குழு கூட்டத்தின் போது குழுவொன்று நியமிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் இவ்வாறு வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here