ராகலை – பகலவத்தை தோட்டத்தைச் சேர்ந்த, 71 வயதுடைய நபர் ஒருவர், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று (19) காலை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார் என்று, இராகலை பொதுச் சுகாதாரப் பிரிவு பரிசோதகர் லஹிரு கருணாரத்ன தெரிவித்தார்.
குறித்த நபர், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர், காய்ச்சல் காரணமாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்குச்சிகிச்சை பெறச் சென்ற நிலையில், இவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை வார்ட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலேயே, இன்றைய தினம் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளார்.
தொற்றினால் உயிரிழந்த நபரின் குடும்பத்தார் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்க உள்ளதாக, அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.
டி சந்ரு