ஹம்பந்தோட்டையிலிருந்து மொனராகலை நோக்கி பயணித்த இராணுவ ஜீப் வாகனமொன்று மொனராகலை வெல்லவாய வீதியில் உள்ள பாலாருவ பகுதியில் வைத்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான சம்பவம், புதன்கிழமை (27) அன்று இடம்பெற்றது.
இதன் போது ஜீப் வண்டியில் பயணித்த ஓட்டுநர் மற்றும் இரண்டு வீரர்கள் சிறு காயங்களுக்குள்ளான நிலையில் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஜீப் இலங்கை இராணுவத்தின் கஜபா படைப்பிரிவு, ஹம்பாந்தோட்டை முகாமைச் சேர்ந்தது என தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.