இரு மதத்தவர்கள் கலந்து கொண்ட வாணி விழா ஹட்டன் கல்வி வலயத்தில் நடைபெற்றது.

0
215

இந்துக்களின் முக்கிய விரதங்களில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று விஜயதசமியுடன் நிறைவு பெற்றன. குறித்த விரதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரு விழாவாக எடுக்கப்படாத போதிலும் சுகாதார வழிகாட்டல்களுக்கு முக்கியத்துவமளித்து சம்பிரதாய சமய கிரியை நிகழ்வுகள் மட்டுப்படுத்தப்பட்ட அளிவிலானவர்களின் பங்களிப்புடன் ஆலங்களிலும், பாடசாலைகளிலும்,நிறுவனங்களிலும். நடைபெற்றன.

இரு மதத்தவர்களும் கலந்து கொண்ட வாணி விழா ஹட்டன் கல்வி வலயத்தில் வலயக்கல்விப் பணிப்பாளர் ஸ்ரீ.ஸ்ரீதரன் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் முப்பெரும் தேவிகளுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன குறித்த பூஜை வழிபாடுகளில் தமிழ் சிங்கள பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தமையும் சிறப்பம்சமாகும்.

முப்பெரும் தேவிகளுக்கு பழம்,பல் தேன் பொங்கல்,பலகாரம் உள்ளிட்ட பல்விதமான பொருட்கள் வைத்து பூஜைகள் இடம்பெற்றன.
இதில் கல்வி வலயத்தில் பணிபுரியும் தமிழ் சிங்கள ஊழியர்கள் மற்றும் உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் உட்பட மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கலந்து கொண்டிருந்தனர்.

கே.சுந்தரலிங்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here