இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மீதான விசேட பொருட்களுக்கான சுங்க வரி அதிகரிப்பு!

0
15

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றின் மீதான விசேட பொருட்களுக்கான சுங்க வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வரி திருத்தம் நேற்று செவ்வாய்க்கிழமை (26) முதல் மூன்று மாத காலத்திற்கு அமுலில் இருக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு மீதான விசேட பொருட்களுக்கான சுங்க வரி 60 ரூபாவிலிருந்து 80 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயம் மீதான விசேட பொருட்களுக்கான சுங்க வரி 10 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here