இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி.

0
215

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்று கொண்டது.

துடுப்பாட்டத்தில் தனஞ்ஜய டி சில்வா 91 ஓட்டங்களை அதிகபடியாகப் பெற்றுக் கொடுத்தார். போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக 48 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி 43 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்திருந்த போது 244 ஓட்டங்களைப் பெற்று வெற்றியிலக்கை அடைந்தது.

இப்போட்டியில் இங்கிலாந்து அணி சார்பில்  அணித்தலைவர் இயொன் மோர்கன் 75 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றுக் கொடுத்த அதேவேளை, ஜோ ரூட் 68 ஓட்டங்களையும், ஜேசன் ரோய் 60 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதன்படி இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுக்களால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியின் சேம் கரன் தெரிவானார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here