உயிரிழந்த 84 ஈரானியர்களின் இறுதி ஊர்வலம் நாளை மறுதினம் (18) நடைபெறும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இம் மாதம் 04ஆம் திகதி அமெரிக்காவினால் டெனா போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கப்பலில் இருந்த 84 ஈரானியர்கள் உயிரிழந்தனர்.
குறித்த கப்பலானது காலி கடற்பரப்புக்கு அருகில் விபத்துக்குள்ளானதால் உயிரிழந்த ஈரானியர்களின் உடல்கள் காலி வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஈரானியர்களின் உடல்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டன.
அதன்படி, நாளை (17) மாலை தலைநகரின் முக்கிய சதுக்கங்களில் உயிரிழந்தவர்களின் விடைபெறும் நிகழ்வுகள் நடைபெறுவதொடு, இறுதி ஊர்வலம் நாளை மறுதினம் (18) தெஹ்ரானில் நடைபெறும் எனவும் அந்நாட்டு நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




