பிரிஸ்டல் மைதானத்தில் இன்று ஆரம்பமான இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி சீரற்ற வானிலை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச போட்டித்தொடரை 2-0 என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.
இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 41.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில் தசுன் சானக்க ஆட்டமிழப்பின்றி 48 ஓட்டங்களை அதிகப்படியாக பெற்றார்.
பந்துவீச்சில் இங்கிலாந்து அணிசார்பில் டொம் கரண் 35 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
எனினும், வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட இங்கிலாந்து அணி தயாராக இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டியை கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.