இலங்கை (Srilanka) மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகவுள்ளது.இப்போட்டி தம்புள்ளையில் (Dambulla) இன்று (9.11.202) இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.இரு நாடுகளுக்கும் இடையிலான 10 வது T20 போட்டி இதுவாகும். இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற 9 போட்டிகளில் 5 போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது.கடைசியாக நடைபெற்ற 4 போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றியை உறுதி செய்துள்ளது.
இலங்கை அணிக்கு இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற முடிந்துள்ள போதும், 3 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளன.
இதேவேளை, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. போட்டியில் முதலில் ஆடிய இந்தியா (India) 20 ஓவரில் 202 ரன்கள் குவித்தது.
இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடினார். சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன் (Sanju Samson) 47 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சனின் 2வது சதம் இதுவாகும். அதிரடியாக ஆடிய சாம்சன் 50 பந்தில் 107 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இரண்டு சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் சாம்சன் படைத்தார்.