இலங்கை நீதித்துறை வரலாற்றில் மிக இளவயதில் நீதிபதியாக யாழ்ப்பாண தமிழ் பெண்

0
158

யா/சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியின் பழைய மாணவியான இவர் தனது 31வது வயதில் நீதிபதியாக பதவியேற்கவுள்ளார். இலங்கை நீதித்துறை வரலாற்றில் மிக இளவயதில் நீதிபதியாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் தேர்வாகியுள்ளார்.

ஓர் இளம் தமிழ் பெண் நீதிபதியாக மாதுரி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளமை தமிழ் மக்கள் அனைவராலும் பெருமைப்படத்தக்க விடயமாகும்.மாதுரி நிரோசன் எதிர்வரும் முதலாம் திகதி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.

யா/சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியின் பழைய மாணவியான இவர் தனது 31ஆவது வயதில் நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.அதேவேளை, இலங்கையில் தமிழ் நீதிபதிகள் உருவாகுவது எட்டாக் கனியாகவே உள்ளது.

இந்நிலையில் நாடளாவிய நீதியில் இடம்பெற்ற நீதிபதிகளுக்கான போட்டியில், மாதுரி அகில இலங்கை ரீதியில் இவர் 12ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவான இளம் தமிழ் நீதிபதி என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார்.இந்நிலையில், பலரும் அவருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here