புத்தளம் – ஆராச்சிக்கட்டுவ வைரங்கட்டுவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் மனைவி மற்றும் மற்றுமொருவரின் கைகளை வெட்டிய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரின் மனைவி மற்றும் அவரது காதலன் என கூறப்படும் நபர் தாக்குதலுக்குள்ளாகி ஹலவத்தை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச் சம்பவத்தில் ஆராச்சிக்கட்டுவ வைரங்கட்டுவ பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அதே பகுதியில் வசிக்கும் சந்தேக நபரின் நண்பர் ஒருவருடன் அவரது மனைவிக்கு தொடர்பு இருப்பதும் வைரங்கட்டுவையில் ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதும் பொலிஸார் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபரை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.