இலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய திருடனின் செயல்!

0
181

இலங்கையில் திருடன் ஒருவன் செய்த செயலால் நாட்டு மக்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அண்மையில் கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில் பயணி ஒருவரின் பேர்ஸை ஒருவர் கொள்ளையிட்டுள்ளார்.

இந்நிலையில் பேர்ஸை இழந்த நபருக்கு கொள்ளையரிடமிருந்து கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்தக் கடிதத்தில் தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்துள்ளன. அதில் குறிப்பு ஒன்றும் எழுதி வைத்துள்ளார்.

அந்த பதிவில் “உங்களை கடவுள் ஆசி வழங்கியுள்ளார். எனக்கு ஒரு பணத்தேவை இருந்தது. இதனால் தான் பணத்தை எடுத்தேன். இல்லை என்றால் பணத்தையும் திருப்பி அனுப்பியிருப்பேன். இந்த நேரத்தில் அது பெரிய உதவியாக இருந்தது.

அத்துடன் உங்கள் பேர்ஸ் மிகவும் பழையதாக இருந்தது. புதிதாக ஒன்று வாங்குங்கள். இல்லை என்றால் இந்த கடிததத்துடன் அதனையும் அனுப்பி வைத்திருப்பேன். நீங்கள் ஒரு தானம் செய்ததாக நினைத்துக் கொள்ளுங்கள். மிக்க நன்றி” என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருடனிடமிருந்து கிடைத்த கடிதம் மற்றும் தனது ஆவணங்களை பேரிஸின் உரிமையாளர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here