இலங்கை மற்றும் பாகிஸ்தான் பலப்பரீட்சை – எதிர்பார்ப்பில் இரசிகர்கள்

0
265

ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்த இலங்கை அணி புள்ளிப் பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது. ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் வெற்றிவாகை சூடும் எதிர்பார்ப்புடன் இலங்கை அணி இன்று களமிறங்கவுள்ளது.

ஹைதராபாத்தில் நடைபெறும் இந்தப் போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதன்படி, இன்றைய போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஸ் தீக்‌ஷன (Maheesh Theekshana) பங்கேற்பார் என தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் 8 சந்தர்ப்பங்களில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், 7 சந்தர்ப்பங்களில் பாகிஸ்தான் அணியிடம் இலங்கை அணி தோல்வியடைந்ததுடன், ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

அனுர தென்னகோன், துலிப் மெண்டிஸ், அரவிந்த டி சில்வா, குமார் சங்கக்கார ஆகியோர் தலைமையிலான இலங்கை அணி உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது.

இந்த நிலையிலே, ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதன் முறையாக பாகிஸ்தானை வீழ்த்தும் நோக்கில் தசுன் சானக்க (Dasun Shanaka) தலைமையிலான இலங்கை அணி களமிறங்கவுள்ளது.

இதனிடையே, ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்த இலங்கை அணி புள்ளிப் பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது.

அத்துடன், பாகிஸ்தான் அணி தமது முதல் போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இரண்டு புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here