டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றிய மற்றுமொரு கப்பல் இலங்கைக்கு இன்று வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த கப்பலில் 20,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 20,000 மெட்ரிக் தொன் பெற்றோல் கொண்டுவரப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஏற்கனவே 52 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளது.
எனினும் உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வால் அந்த எரிபொருளுக்கு கூடுதலாக 16 மில்லியன் டொலர் செலுத்த வேண்டியிருந்ததாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.