இலங்கையர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய 11 வயது சிறுவனின் செயல்!

0
120

மஹியங்கனை பிரதேசத்தை சேர்ந்த 11 வயதுடைய சிறுவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்த மாதவ கல்ஹார என்ற சிறுவன் தனது 71 வயதுடைய தாத்தாவுடன் உறவினர் வீட்டிற்கு சென்ற போது கீழே கிடந்து ஒரு தொகை பணத்தை கண்டெடுத்துள்ளார்.

6 ஐயாயிரம் நாணயத்தாள்கள் வீதியில் கிடந்துள்ளன. அதன் பெறுமதி 30 ஆயிரம் ரூபாயாகும். அதனை கையில் எடுத்த சிறுவன் இந்த பணத்தை உரிமையாளரை தேடி ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

உரிமையாளைரை எங்கு சென்று தேடுவது என தாத்தா வினவிய போது பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்போம் என சிறுவன் கூறியுள்ளார். அதற்கமைய சிறுவன் தனது தாத்தாவுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று இந்த பணத்தை ஒப்படைத்துள்ளார்.

இந்த பணத்தை ஏன் பொலிஸாரிடம் ஒப்படைக்க நினைத்தீர்கள் வீட்டிற்கு கொண்டு சென்றிருக்கலாமே என சிறுவனிடம் பொலிஸார் வினவியுள்ளார்.

எனது அப்பாவுக்காக தான் இதனை ஒப்படைக்க நினைத்தேன். அவர் மிகவும் சுகயீனமடைந்த நிலையில் உள்ளார். எனது அப்பாவும் ஒரு பொலிஸ் அதிகாரி தான். எனது தந்தை சீக்கிரம் குணமடைய வேண்டும். நான் செய்யும் இந்த புண்ணியம் எனது தந்தைக்கு சென்றடைந்து எனது தந்தை குணமடைய வேண்டும் என சிறுவன் கூறியுள்ளார்.

இவ்வளவு சிறந்த மகனை வளர்த்த தந்தை சீக்கிரம் குணமடைந்து விடுவார் என பொலிஸ் அதிகாரி சிறுவனிடம் கூறி அனுப்பி வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here